சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதிகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அரூர் தேவேந்திரபட்டியை சேர்ந்த வினோத்குமார் – பிரியா தம்பதிக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, ஆண்கள் 7, பெண்கள் 6, குழந்தைகள் 7 பேர் என தனது குடும்பத்தினர் 20 பேருடன் வேன் ஒன்றில் ஏற்காட்டிற்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர். வேனை ஆகாஷ் என்பவர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. ஏற்காட்டை சுற்றிப்பார்த்துவிட்டு மாலை குப்பனூர் மலைப்பாதையில் திரும்பிச்சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே உள்ள மரத்தோப்பிற்குள் புகுந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டதையடுத்து, அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Readmore: அடுத்த ஷாக்!. பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலப்படமா?. உண்மை என்ன?.