இந்திய வரலாற்றில் மிகவும் தாமதான ரயில் பயணம் என்ற நிகழ்வு பதிவாகி இருக்கிறது. 1400 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பகுதியை இந்த ரயில் கடப்பதற்கு மூன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த சுவாரசியமான வரலாற்று பதிவு குறித்து பார்க்கலாம்.
2014 நவம்பர் மாதம் சரக்கு ரயில் ஒன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தியை நோக்கி கிளம்பியது. இரண்டு நகரத்திற்கும் இடையே 1400 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனை சாதாரணமாக சரக்கு ரயில்கள் சுமார் 43 மணி நேரத்தில் கடந்து விடும். இந்த சரக்கு ரயிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 1,361 உர மூட்டைகள் இருந்தன. பிரபல தொழில் அதிபர் ராம்சந்திர குப்தா தான், இந்த சரக்கு ரயிலை வாடகைக்கு எடுத்து, தனது நிறுவனத்திற்கு உரங்களை கொண்டு செல்ல பயன்படுத்தினார். இருப்பினும், இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு வரவில்லை. இது தொடர்பாக ஏராளமான புகார்கள், காவல்துறை, ரயில்வே துறை உள்ளிட்டவற்றிடம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், யாராலும் அந்த சரக்கு ரயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மூன்றரை ஆண்டுகள் கழித்து 2018 ஜூலை மாதம் அந்த சரக்கு ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்திக்கு வந்தது. மூன்றரை ஆண்டுகள் ஆனதால், ரயிலுக்குள் இருந்த உர மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்திருந்தன. சரக்கு ரயில் இடைப்பட்ட காலத்தில் எங்கே சென்றது, எதனால் இந்த அளவு தாமதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த நிகழ்வு முக்கிய புள்ளியாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஒவ்வொரு ரயிலையும் கண்காணிக்கும் தொழில்நுட்பம் ரயில்வேயில்லை பரவலாக கொண்டு வரப்பட்டது.
Readmore: எச்சரிக்கை!. கூகுளில் இவைகளை மட்டும் தேடிப்பார்க்காதீங்க!. மீறினால் சிறை தண்டனைதான்!