கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆவேசமாக பேசியுள்ளார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனி மனிதர் தவறு செய்தால் தண்டிக்கும் நிலையில், அரசே குற்றமிழைக்கும்போது என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினார்.
காவல் துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை இணைத்து கோயில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. ஆனாலும், 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோயில்களில் சிலைகள் திருட்டு நடந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருடுபோயுள்ளன. இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை. 2015 முதல் 2018 வரை கோயில் பாதுகாப்பு படைக்கு ரூ.172 கோடி செலவு செய்தும் எந்தப் பலனும் இல்லை என்று கூறினார்.
அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, உடனடியாக இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும். அறநிலையத் துறை அறமற்ற துறையாக உள்ளது.கோயில் பாதுகாப்புப் படையில் தற்போது முன்னாள் போலீஸாரை சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
Readmore: நோட்!. வாக்காளர் பட்டியல் திருத்தம்!. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்!.