மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பட்ட உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தங்கமணி, தி.மு.க ஆட்சியில் அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டார்கள்.

இந்த ஆட்சியில் வரிக்கு மேல் வரி போடப்படுகிறது. ஆனால், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. மக்களை வருந்துகிற அரசாக இருக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால், மகளிருக்கு கொடுக்கப்படும் ரூ.1000 அவர்களுக்கு வந்திருக்காது.

ஜெயலலிதா, தனது அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். ஆனால், திமுக அரசு எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக திட்டம் என்பதால் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு மறுத்து வருகிறது. 200 தொகுதிகளின் வெற்றி என்ற முதல்வரின் பேச்சை செயல்படுத்தப்போவது அதிமுக தான். வரும் தேர்தலில் அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 6 சதவீத வாக்குகள் குறைந்தது. வரும் தேர்தலில் மீண்டும் 6 சதவீதம் குறையும். பிரிந்து கிடக்கும் அதிமுகவினரில் யாரைச் சேர்ப்பது என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என்று கூறினார்.

Readmore:பழிவாங்குகிறார் தனுஷ்!. 3 பக்க கடிதம்!. நடிகை நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு!