தீபாவளிக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை, அதற்கு அடுத்தநாள் நவம்பர் 1ம் தேதியும்(வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்தால், பின்னர் சனி, ஞாயிறு வார விடுமுறை ஆகும். இதனால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக, விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாட்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: வரலாறு காணாத உச்சம்!. ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை!. அதிர்ச்சியில் மக்கள்!