திம்பம் மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். அதனால், திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியிலிருந்து திருப்பூருக்கு காய்கறிகளோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதையில் சென்றபோது, 14 வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சரக்க வேன் டிரைவர் உயிர் தப்பினார். விபத்து காரணமாக தமிழக – கர்நாடகா மாநிலங்களுக்கிடையே சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Readmore: ஆட்டையாம்பட்டியில் பயங்கர விபத்து!. பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல்!. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள்!