சேலத்தில் இளைஞர் கார் ஓட்டி பழகியபோது, வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் மேகவர்ணன், கல்லூரி பயின்று இவர், தனது தந்தையின் காரை ஓட்டி பழகியுள்ளார். அப்போது, சம்பவத்தன்று தனியாக காரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே உள்ள சாமியாம்பாளையம் நீர் பாசன வாய்க்காலில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,

இதனை கண்ட அக்கம்பக்கதினர் அதிர்ச்சியடைந்து கல்லூரி மாணவனை காரில் இருந்து பத்திரமாக மீட்டெடுத்தனர்.அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலம் மீட்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Readmore: அடுத்த ஷாக்!. சீமானை நம்பி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!. சேலம் மேற்கு மாவட்ட செயலர் விலகல்!