சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இன்று காலையில் திருச்செங்கோட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. ஆட்டையாம்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, தனியார் பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் தனியார் பேருந்தும் லாரியும் கடும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பயணிகளை மாற்று வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர். மேலும் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.