தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் : ஓட்டுநர், நடத்துனர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 3,274
மண்டலம் மற்றும் காலியிடங்கள் :
சேலம் மண்டலம் – 486
கும்பகோணம் மண்டலம் – 756
விழுப்புரம் மண்டலம் – 322
கோவை மண்டலம் – 344
மதுரை மண்டலம் – 322
நெல்லை மண்டலம் – 362
கல்வித்தகுதி :
* இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 24-இல் இருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி/ முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அனுபவம் :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கட்டாயம் 18 மாதங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்துத் தேர்வு
* டிரைவிங் தேர்வு
* நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
* விருப்பமும் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் https://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* தேர்வுக்கட்டணமாக ரூ. 1,180 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.590 செலுத்தினால் போதும்.