சேலத்தில் 9ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இன்ஸ்டா காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (19) . இவர் இன்ஸ்டாவில் 9ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவி, கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், மாலை மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடினர்.
இதையடுத்து, விசாரணையில், இளைஞர் யுவராஜை திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.