தமிழகத்தில் மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் கிளை அமைப்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. இதனை Tangedco என்று அழைக்கின்றனர். புதிதாக மின் இணைப்பை பெறுவோர், பயன்பாட்டில் உள்ள மின் மீட்டர்களை பழுது பார்த்தல், மின் கம்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றுக்கு Tangedco தான் தீர்வை அளித்து வருகிறது. குறிப்பாக புதிய மின் இணைப்பு அல்லது பழுதான மின் மீட்டர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு மின்சார வாரியத்திடம் முறையாக விண்ணப்பித்து தான் புதிய மின் மீட்டர்களை பெற முடியும். இதற்காக குறிப்பிட்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.
அதாவது, மின் மீட்டர் பழுதானால், மின்வாரிய விதிகளின்படி, ஓராண்டுக்கான இருமாதச் சுழற்சியின்போது அனுப்பிய அதிக மின் கட்டணத்தை வேண்டும். நுகர்வோர் செலுத்த இந்த நடைமுறை மின் மீட்டர் மாற்றப்படும் வரை இருக்கும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்படைகின்றனர். வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த மீட்டர்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணத்தில் இடம்பெறுகிறது.
எனவே மின் மீட்டர்களை ஒட்டுமொத்தமாக மின்சார வாரியம் வாங்கி, அவற்றை மண்டல வாரியாக விநியோகம் செய்து பொறியாளர்களால் பரிசோதனை செய்து நேரில் வந்து பொறுத்தும் வரை காத்திருப்பது அவசியம். பொதுமக்கள் தாங்களாகவே நேரடியாக சென்று மின் மீட்டர்களை வாங்கி கொள்ளலாம். இதற்காக மின் மீட்டர்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒருமுனை மீட்டர் விலை 970 ரூபாய். இந்த மீட்டரை, ‘ஹோலி மீட்டர்ஸ் இந்தியா, கேபிடல் பவர் சிஸ்டம்ஸ், லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ், ஷெனைடர் எலக்ட்ரிக் இந்தியா, ஜீனஸ் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ ஆகிய ஐந்து நிறுவனங்களிடம் இருந்து வாங்கலாம். மும்முனை மீட்டர் விலை 2,610 ரூபாய். இதை, ‘ஹோலி மீட்டர்ஸ் இந்தியா, கேபிடல் பவர் சிஸ்டம்ஸ், லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ், எச்.பி.எல்., எலக்ட்ரிக் அண்டு பவர், ஷெனைடர் எலக்ட்ரிக் இந்தியா, ஜீனஸ் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ ஆகிய ஆறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.