தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்பணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடப்பதாக குற்றம் சாட்டிய கருப்பணன், சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய கருப்பணன், தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது என்று ஆதரவாக பேசியது கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Readmore: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!