நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 30) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்ததாகவும் அதற்கான பரிசோதனைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
Readmore: முழு கொள்ளளவை எட்டிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை!. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!