தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அக்டோபர் 6ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், திங்கட்கிழமை 7-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதாவது, பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதேபோல், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றொரு அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் மகிழ் முற்றம் குழுக்கள் உருவாக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் விதத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவை பெயரில் குழுக்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பதை குறைத்தல் மற்றும் கல்வியை ஊக்குவிக்க ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையேயான உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: சேலம் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!. பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!.
மேலும் படிக்க...

அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அன்று அரசு பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. சிறுவர்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில், ஆரம்பக்கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. விஜயதசமி தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லை தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக "அ" என்று எழுதப்பழக்குவார்கள். அந்தவகையில், வரும் சனிக்கிழமை விஜயதசமி அன்று பள்ளிகளில் புதிய மாணவர்…

நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது. அதில், 220 வேலை நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வரை மட்டுமே வேலை நாட்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதனை 220 ஆக மாற்றியதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பைத் தொடர்ந்து…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள் என்று 4 நாட்கள் மீண்டும் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, அலுவலகங்களில் பணியாற்றுவோரும் தொடர் விடுமுறை நாள் என்றால், கொஞ்சம் ரிலாக்ஸாக வேலை செய்யலாம் என்ற வகையில் விடுமுறை நாளை முன்கூட்டியே திட்டமிட்டு விடுகின்றனர். அவர்களை குஷிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இந்த வாரம் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. அந்த வகையில்,…