நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Readmore: புதிதாக 1,000 மருந்தகங்கள்..!! கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி..? அமைச்சர் பெரியகருப்பன் சேலத்தில் பேச்சு..!!