வாழப்பாடி செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் தினேஷ்(16), அரவிந்த்(16). இருவரும் ஏத்தாப்பூரில் அரசு ஆண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்தநிலையில், மாணவர்களான இருவரும் நேற்று செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே ரயில் தண்டவாளத்தில் சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக மோதியதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயங்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அரவிந்த், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: தினமும் 2 துண்டு கிராம்புகள் போதும்!. வைரஸ் தொற்று முதல் சைனஸ் வரை!. எந்த நோயும் நெருங்காது!.