2024-25ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாணவர்கள் ரூ.225 மற்றும் ரூ.175 என இரண்டு விதமான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம். தமிழ் வழியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் அல்லாத பிறமொழியில் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி & எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எஸ்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் எம்பிசி வருமான உச்சவரம்பு ஏதுமின்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோர்கள் சம்பாதிக்கும் BC/BCM சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார், மெட்ரிகுலேஷன் மற்றும் மிஷனரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தில் தள்ளுபடி பெறத் தகுதியற்றவர்கள். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வு ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யாது!. அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!. தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்!