ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accident | ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி (65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆம்புலன்ஸை வரவழைத்து, ராமநாதபுரம் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, விறகு ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு சென்ற நோயாளி வரிசைகனி மற்றும் அவருடன் சென்ற சகுபர் சாதிக் (47), அனீஸ் பாத்திமா (40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸில் பயணித்த ஹர்ஷத், கதீஜா ராணி, ஆயிஷா பேகம் உள்ளிட்ட 5 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஷர்ஷத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து எப்படி நடந்தது..? ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின்பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் அருகே உட்கார்ந்திருந்த சகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர். மேலும், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால், ஆம்புலன்ஸுக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

Read More : ”இனி திருமணத்தை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை”..!! வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?