இந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ்-ன் Crew-9 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. பூமியிலிருந்து விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்லும் இது, வரும்போது சுனிதா வில்லியம்ஸை அழைத்து வருமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஆய்வுக்காக பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்கி விண்வெளி வீரர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி ஆய்வு செய்ய விண்வெளிக்கு சென்றவர்தான் சுனிதா வில்லியம்ஸ். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், நீண்ட காலமாக அமெரிக்கா சார்பில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். அவரை அங்கு கொண்டு சென்றது ஸ்டார்லைனர் எனப்படும் விண்கலன்தான்.
இதை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்தான் உருவாக்கியிருந்தது. விண்வெளி துறையில் போயிங்கின் முதல் பயணம் இதுதான். எனவே தொடக்கத்தில் சில பிரச்னைகள் இருந்தது. இருப்பினும் வெற்றிகரமாக சுனிதாவையும், புட்ச் வில்மோர் எனும் மற்றொரு வீரரையும் விண்வெளிக்கு ஸ்டார்லைனர் கொண்டு சேர்த்துவிட்டது.
சுனிதாவின் பயண காலம் வெறும் ஒரு வாரம்தான். ஆனால் ஸ்டார்லைனர் செய்த பஞ்சாயத்து காரணமாக 2 மாதங்களாக சுனிதா விண்வெளியில் சிக்கியுள்ளார். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்று? பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அடுத்த ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று விண்வெளிக்கு போகுது.. அதுல கூப்பிட்டுக்கலாம் என இஸ்ரோ சொல்லிவிட்டது.
இப்படி இருக்கையில், வரும் நவம்பர் மாதம் Crew-9 எனும் ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புகிறது. இதில் 4 பேர் வரை பயணிக்கலாம். ஆனால், அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் என இருவர் மட்டும்தான் அனுப்பப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது, இதில் சுனிதா பூமிக்கு திரும்புவாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
நான்கு பேர் பயணிக்கக்கூடிய இந்த விண்கலத்தில், இவர்கள் இருவரைத்தவிர காலியாக இருக்கும் மற்ற இரு இருக்கைகளில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரரின் எடைகொண்ட பொருட்களுடன் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது. வளிமண்டலத்தைத்தாண்டி இந்த விண்கலம் செல்லும்பொழுது விண்கலத்தின் எடைக்குறைவாக இருந்தால், ஒன்று செயலிழக்கலாம் அல்லது பழுதடையலாம். ஆகவே இதைத் தவிர்க்கும் பொருட்டு வீரர் இருவர்களின் எடைகொண்ட பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்வெளிக்குப் பறக்கத் தயாராக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி நிலையத்தின் குட்பை என்பது விண்வெளி வீரர்கள் அணிந்துகொள்ளும் உடை, மற்றும் அவர்களின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள்தான். இதில் விண்வெளி வீரர்கள் உடுத்தும் உடையானது யூஸ் அன்ட் த்ரோ மாதிரி… அதாவது, அவர்கள் அணிந்துகொள்ளும் உள் ஆடைகளை இரு தினங்களுக்கு ஒரு முறை என்றும், பயிற்சியின்போது ஒரு வாரம் என்று உடைகளை அணிந்துகொள்வார்கள் . அதன்பிறகு அந்த ஆடைகள் குப்பையில் சேர்த்துவிடுவார்கள். அது போல் விண்வெளி நிலயத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் குளிப்பது கிடையாது.
காரணம் அங்கு எந்த பொருட்களுக்கும் எடை என்பது இல்லை என்பதால் அனைத்துப்பொருட்களும் மிதக்கும்… இதில் தண்ணீரும் விதிவிலக்கல்ல…. அதுவும் உருண்டை திவல்களாக மிதக்கும்… ஆகவே வீரர்கள் ஒரு பாத்டவல் கொண்டு தங்களின் உடலைத் துடைத்துக்கொள்வார்கள். மேலும் அவர்கள் தினமும் சாப்பிடும் கழிவுகள் அதன் பேக்குகள் உள்ளவற்றையும் குப்பைகளாகச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள் . அதேபோல் மனித கழிவுகளை ஷக்ஷன் என்ற உறிஞ்சும் கருவின் உதவியால் உறிஞ்சப்பட்டு ஒரு டேங்கில் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.
இது இப்படி இருக்க… மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்று, விண்வெளி நிலயத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் நைட்ரஜன் கலந்த ஆக்ஸிஜனை சுமந்துக்கொண்டு பூமியிலிருந்து கார்கோ விண்கலமானது விண்வெளிக்குச் செல்லும்.
அந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பும் சமயம் விண்வெளி வீரர்கள் சேகரித்து வைத்திருக்கும் மனித கழிவு அடங்கிய டேங்குகள் மற்றும் குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமி திரும்பும். திரும்பும் வழியில் வளிமண்டலத்தைக் கடக்கும் சமயம் குப்பைகள் அங்குக் கொட்டப்படும். கொட்டப்பட்ட குப்பைகள் வளிமண்டலத்தை உராயும் பொழுது அங்கு முற்றிலும் எரிந்து சாம்பலாக மாறி காற்றில் கலந்து விடும். இப்படிதான் அங்கிருக்கும் கழிவுகள் அழிக்கப்படுகிறது.
Readmore: ரயில் பயணிகளுக்கு பெரிய கட்டுப்பாடு!. மதுபானம் தொடர்பான புதிய விதிகள் பற்றி தெரியுமா?