திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், 120 ரூபாய் வரை கொப்பரை தேங்காய் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, வாரம் வாரம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றுவருகிறது. சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டுசெல்கின்றனர். அந்தவகையில் நேற்று மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ₹5.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், மொத்தம் 125 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ₹101.80 முதல் ₹120.65 வரையிலும், 2ம் தரம் ₹73.30 முதல் ₹98.80 வரை என மொத்தம் ₹5.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 27ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.