சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் மளிகை பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறைத்துறை பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலகவளாகத்தில் மாவட்டச் சிறை உள்ளது. இதில், இங்கு 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் இந்நிலையில், கைதிகளுக்கான உணவு வழங்க கூட்டுறவு துறையில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருள் கொள்முதல் செய்யபடுகிறது. இந்நிலையில், தரமற்ற மளிகை பொருட்களில் சமைத்து உணவு பரிமாறுவதாகவும் மீதியாகும் பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்பதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக சேலம் மத்திய சிறை எஸ்பி வினோத் மற்றும் விஜிலன்ஸ் போலீசார் ஆத்தூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கணக்கில் வராத 18 கிலோ துவரம் பருப்பு உட்பட 23 வகை மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டுமென துணை சிறை அலுவலர் வைஜெயந்திக்கு எஸ்பி நோட்டீஸ் வழங்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாளுக்கும் விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தார்.
அந்த அறிக்கையில் விசாரணையின் முடிவில் சிறையில் இருந்து மளிகை பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி நடந்திருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டார். சிறையில் மளிகை பொருளை வெளியே விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறைத்துறை பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More : சுக்குநூறாக நொறுங்கிய லாரி..! படுகாயங்களுடன் உள்ளேயே சிக்கிய டிரைவர்..!!