அரசு திட்டத்தை வைத்து போலி நர்ஸை மூலம் மாமியாரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட மருமகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் சரவணபெருமாள். திருச்செங்கோடு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சரவணபெருமாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் மாமியாரை தீர்த்துக்கட்டி சொத்து முழுவதையும் அனுபவிக்க திட்டமிட்டு வந்துள்ளார்.

இப்படி இருக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் தனது வீட்டுக்கு வந்த நர்ஸ் கொடுத்த ஊக்க மருந்தை தனலட்சுமி குடித்ததாகவும், அதனால் வாந்தி பேதி ஏற்பட்டடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தனலட்சுமிக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த நிலையில், ‘எனர்ஜி டிரிங்’ என விஷ மாத்திரை கூல்டிரிங்சில் கலந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மகனின் திருமணத்தை பிடிக்காத தனலட்சுமி அதனை பயன்படுத்திக் கொண்டு தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் வேறு திருமணம் செய்து வைக்கிறேன், தனது சொத்தில் பங்கும் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். மாமியார் தங்களை பிரிக்க நினைப்பது குறித்து தனது தாய் பாப்பாத்தி இடம் தெரிவித்திருக்கிறார் தமிழ்ச்செல்வி. தனலட்சுமி இறந்துவிட்டால் சொத்து தானாகவே தனது கணவருக்கு வந்து விடும் என்பதால் அவரை கொலை செய்ய தாயும் மகளும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதற்காக, தமிழ்செல்வி, அவரது தாய் பாப்பாத்தி இருவரும், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய கோமதி, என்பவரை அணுகியுள்ளனர். மூவரும் திட்டம் தீட்டிய நிலையில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் சோதனை செய்வதுபோல், நேற்று காலை, 11:00 மணிக்கு கோமதி சென்றுள்ளார். தனலட்சுமிக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த நிலையில், ‘எனர்ஜி டிரிங்’ என விஷ மாத்திரை கலந்த கூல்டிரிங்ஸை கொடுத்தது தெரிய வந்தது. மேலும், தான் கொலை திட்டத்திற்காக வந்த கோமதி, தனக்கே தெரியாமல் செல்போன் எண்ணை தன லட்சுமியிடம் கொடுத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி நர்ஸ் கோமதி, தமிழ்செல்வி, பாப்பாத்தியை, திருச்செங்கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

Readmore: பற்றி எரிந்த சிறை..!! 160 பெண் கைதிகளை பலாத்காரம் செய்து தீவைத்து கொளுத்திய ஆண் கைதிகள்..!!