காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகளை இருதரப்பு பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி வரநல்லூர் சின்ன பெரிச்சிபாளையம்புதூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை, சங்ககிரி கத்தேரி சாமியாம்பாளையத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் அருண்குமார் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இருவரும் நேற்று(செப்.5) வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதேபோல், எடப்பாடி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண, கோரணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரை காதலித்து வந்த நிலையில், நேற்று வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்களும் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருதரப்பு பெற்றோரை அழைத்து பேசி சமாதானம் செய்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி காதல் ஜோடியை பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.