அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மாலையில் விடுக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறும்போது,”இதைவிட கடுமையான வழக்குகளில் காவல்துறை விசாரிக்கவில்லையா? பெண்கள் படிக்கும் இடத்திற்கு சென்று மிரட்டி குற்றம் செய்யும் துணிவு எப்படி வருகிறது? இதற்கு முன்பு சிசிடிவி கேமிரா இருந்ததா? சிசிடிவி இல்லாத காலத்திலும் காவல்துறை திறமையாக துப்பு துலக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நான் சென்று மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஐ.பி.எஸ்.அதிகாரி வருண்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை. நான் மன்னிப்பு கேட்பதாக சொன்ன தொழிலதிபரை கூட்டி வாருங்கள். தவறு செய்தது வருண்குமார் தான்; நான் தவறு செய்யவில்லை. எங்கள் கட்சிகாரர்களின் செல்ஃபோன்களில் இருந்து ஆடியோக்கள் களவாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.” என்று சீமான் கூறினார்.
வருண் குமார் நேருக்கு நேர் நின்று என்னுடன் பேசுவாரா? நாகரிகம் கருதி சில அதிகாரிகள் மற்றும் பத்திரிகையின் பெயர்களை கூற விரும்பவில்லை. அனைவரையும் அனுப்பி, எனக்கும் அவருக்கும் பிரச்சினை வேண்டாம், அதை முடித்துவைக்கும்படி அனுப்பி வைத்தவர் வருண்குமார். துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைத்துக் கொண்டு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது கேவலமாக இல்லை? என்னிடம் மோதி தன்னை ஒரு ஆளாக காட்டிக்கொள்ள அவர் நினைக்கிறார். அவர் சரியான ஆண்மகன் என்றால் எனக்கு தண்டனைப் பெற்றுத் தரட்டும். காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் குற்றவாளி அவர் என்று விமர்சித்துள்ளார்.
Readmore: +2 மாணவியின் காதல்!. ரகசியமாக குடித்தனம் வைத்த பெற்றோர்!. பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி!.