ஜுலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு ஏற்ப மின் கட்டணமும் உயர்த்தப்படுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 2023ல் 2.18 சதவீதம், ஜூலை 2024ல் 4.83 சதவீதம் என அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதங்களில் மின் கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் 2025 ஜூலை மாதத்திலும் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மின் கட்டண உயர்வு பொருந்து என்று கூறப்படுகிறது. இது குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், 2025-26 நிதியாண்டில் மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி இதர கட்டணங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளில் கட்டண உயர்வை மானியத்தின் மூலம் நுகர்வோருக்கு நேரடி பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. நடப்பாண்டு எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Readmore: சேலத்தில் மகன்களுடன் சேர்ந்து மருமகளை கொடூரமாக தாக்கிய மாமியார்!. குழந்தைகள் கண்முன்னே பகீர் செயல்!.