சேலம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டப்பகலில் ரவுடியை சுத்துப்போட்டு மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் சரவணன். பிரபல ரவுடியான இவர், பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை சரவணன் தன்னுடைய காரில் வெள்ளாளகுண்டம் சென்று விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார்.
வலசையூர் அடுத்துள்ள பனங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து சரவணனை தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட ஓட முயன்ற நிலையில் சவரணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனை மீட்ட அக்கம்பக்கத்தினர் காரிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சரவணன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கொலையான சரவணன் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Readmore: மக்கள் அதிர்ச்சி..!! இன்று முதல் பால், தயிர் விலை அதிரடி உயர்வு..!! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..?