எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 65 வயது முதியவர் ராஜி. கூலித் தொழிலாளியான இவர் மனைவியுடன் வசித்து வருகிறார். திருச்செங்கோட்டில் தனியார் கொரியர் நிறுவனம் நடத்திவரும் இவரது மகன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேஷன் அட்டை வாங்குவதற்காக வெட்டுக்காட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு மருமகள் சென்றுள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட மாமனார், உனக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, அருகில் உள்ள கோவிலுக்கு இரவு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவில் வீட்டிற்கு சென்ற நிலையில், தூங்கிக்கொண்டிருந்த மருமகளை வலுக்கட்டாயமாக மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கணவர் கொடுத்த புகாரின் பேரில் மாமனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பேய் பிடித்திருப்பதாக கூறி மருமகளை மாமனாரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: தங்கத்தில் திருமண மாலை..!! மணமகள் புடவையே ரூ.8 லட்சம்..!! 600 சவரன் நகையில் ஜொலித்த பிரபல நடிகரின் பேத்தி..!!