வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 16 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்16 ரூபாய் விலை உயர்ந்து 1,980.50 ரூபாய்க்கு இன்று (01.12.2024) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் (நவம்பர்) 1964.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 16 ரூபாய் விலை உயர்ந்து 1,980.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி 818.50 ரூபாய் என்ற அளவில் தொடர்கிறது.