100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரையிலும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வால் வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக இணையத்தில் வைரலாகும் செய்திகள் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், உண்மைக்கு மாறான இந்த செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், தங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களை பார்க்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Readmore: எடப்பாடி அருகே 4 குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம்!. மேலும் 3 புரோக்கர்கள் கைது!.