இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில், ‘ப்ரிஜ், மைக்ரோவேவ் ஓவன்’ போன்ற நவீன மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. தேவையானபோது சமைத்து சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவை சமைத்து, ‘ப்ரிஜ்’ஜில் வைத்துக் கொள்கிறோம்.

விரும்பும்போது, அதை மீண்டும், ‘மைக்ரோவேவ் ஓவனி’லோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது, வழக்கமாகி விட்டது. எப்போதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும் தான், இதற்கு காரணம். ‘உணவுகளை இப்படி சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துகள் குறைந்து போய் விடும். அதுவே, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக மாறி விடும்.

அந்தவகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து இந்தியர்களிடையே ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், சமையல் எண்ணெய்கள் அல்லது கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதை சூடாக்கும்போது நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகின்றன. இது இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உணவு எண்ணெய்யை ஒன்று அல்லது 2 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்துவதே பாதுக்காப்பானது என்றும், அதற்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது ஆபத்தில் முடியும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Readmore: காவல் நிலையம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! தங்கையை திட்டியவுடன் அண்ணன் செய்த செயல்..?