தஞ்சாவூரில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் 9 வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது. இதனை சிறுமியின் பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வல்லம் அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதில் 10ம் வகுப்பு சிறுவன், சிறுமியை காதலிப்பதாக சொல்லி பாலியல் ரீதியாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறுவனும் இதை ஒப்புக்கொண்டதையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Readmore: சமூக வலைதளத்தில் சென்னை இளைஞருடன் பழக்கம்!. அடிக்கடி உல்லாசம்!. ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பம்..!!