ஐதராபாத்தில் பள்ளி மதிய உணவின்போது பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் செகந்திராபாத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வீரேன் ஜெயின் என்ற மாணவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல வீட்டில் இருந்து ஜெயின் மதிய உணவு பூரி கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் திடீரென மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்த சிறுவன் ஆறாம் வகுப்பு படிக்கும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அந்த மாணவன் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்தால் எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அந்த பூரி மூச்சு குழாயை அடைத்துவிடவே மூச்சு விட முடியாமல் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், “சிறுவன் மதிய உணவுக்கு வீட்டில் இருந்து பூரிகளை கொண்டு வந்துள்ளான். ஒரே நேரத்தில் மூன்று பூரிகளைச் சாப்பிட முயன்ற போது திடீரென மூச்சு திணறி இருக்கிறது. இதனால் சிறுவன் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தான்” என்றார்.

பூரிகள் அடைத்ததால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டான்.. அதைக் கவனித்த பள்ளியில் வேலை செய்து வந்த ஊழியர்கள் உடனடியாக அவனை அருகே உள்ள கிளின்க்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Readmore: இனி உங்க பான் கார்டு செல்லாது?. QR கோடு அம்சத்துடன் PAN 2.0 அறிமுகம்!. மத்திய அரசு அதிரடி!