எடப்பாடி சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரசிராமணி செட்டிப்பட்டி பகுதிகளில் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பரிசலில் சென்று அடிப்படை வசதிகளை செய்துவந்தனர். மேலும் சீரமைப்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் கேசவன், மேற்கு ஒன்றியத் தலைவர் விக்னேஷ், அரசிராமணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பால், பன், பிஸ்கட், உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

Readmore: சாலையில் புகுந்த ஆற்றுநீர்!. எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை!. பரிசலில் செல்லும் மக்கள்!.