திருச்செங்கோடு அருகே தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட களவாணிகள், ரோந்து சென்ற போலீசாரை கண்டதும் தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது ஆடுகள் தொடர் திருடு போவது வாடிக்கையாக இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபாபதி அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார், மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சங்ககிரியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆடு களவாணிகள், அவர்களைக் கண்டதும் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து, அந்த ஆடு, சபாபதிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டை மீட்ட போலீசார், அதை சபாபதியிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆடு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Readmore: இனி ரொம்ப சிரமம்!. நவ.1 முதல் டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் அதிரடி மாற்றம்!. புது ரூல்களை இறக்கிய RBI!.