கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை 07.08.2024 (புதன்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 07. 08. 2024. புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற 31. 08. 2024 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.