விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் நடைபெற்றது. மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுந்தந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.
தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார். அதன்படி, மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்ற தனிமனித அடையாள வேறுபாடுகளை களைதல். விகிதாாச்சார அடிப்படையில் உரிமை. இரு மொழிக் கொள்கை. தமிழே ஆட்சி மொழி, வழக்காடு, வழிபாட்டு மொழி. அரசு, தனியார் துறை லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகம் கொண்டு வருதல். போதை அறவே இல்லாத தமிழகத்தை படைத்தல். தீண்டாமை ஒழிமை – பழமைவாத பழக்கவழக்கங்கள் ஒழிப்பு. மாநில – மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை, எதிர்த்து மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.
பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும். மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்.
மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும் தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்.
தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. தமிழ்வழி கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எங்கும் அரசியல் தலையீடு அற்ற நிலையை உருவாக்குவோம். சுற்றுசூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது. திண்டாமை ஒழிப்பு, போதை இல்லா தமிழகம், இதுவே நம் கொள்கையாகும். ஜாதி மதம், இனம், நிறம் பொருளாதாரம், பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், மாற்றுத்திறனாளிகள் எல்லா விதத்திலும் மற்றவர்களுக்கு சமமானவர்களே இதுதான் சமத்துவம். மத இன மொழி வர்க்கப் பேதமற்ற கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது கொள்கை.
நிர்வாக சீர்திருத்தம் வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்காமல் வழிவகுக்கப்படும். அரசு நிர்வாகம் முற்போக்கு சிந்தனையோடு விளங்கும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தை விதிமுறை உருவாக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்வழிக் கல்வியில் ஆராய்ச்சி கல்விவரை படிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்படும். கல்வி மாநில உரிமையில் கொண்டுவரப்படும். ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். மகளிர் காவல் நிலையங்கள் போல, மாவட்டந்தோறும் பெண்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும் . மண்டல வாரியாக துணை நகரங்கள் அமைக்கப்படும். வனப்பரப்பளவு அதிகரிக்கப்படும். உற்பத்தித்திறன் உடல் மற்றும் உள்ள நலன் கிடக்கும் சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் போதை அறவே இல்லாத தமிழக படைத்தல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கைகள் ஆகும்”.