நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியாரை சொல்லி திமுக வாக்கு கேட்குமா இல்லை காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா? என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ஆக்ரோஷமாக கூறி வருகின்றனர். இத்தனை சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சி நேரலையில் பெண் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சீமான், பீப் போடும் அளவிலான சொல்லை கூறி பிரபாகரனின் அண்ணன் மகனை சரமாரியாக தாக்கி பேசியது தற்போது வைரலாகி வைருகிறது.

அதாவது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதுகுறித்து, தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த சீமான், ” திமுகவில் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் சிலறை அனுப்பி வைக்கிறேன் சேர்த்துக்கொள்ளுங்க. திமுகவில் சேர்ந்தவர்களை எல்லாம் சில நாட்களுக்கு முன்பே கட்சியில் இருந்து வெளியில் சென்றுவிட்டவர்கள். தற்போது, பெரியாரை முன்னிறுத்தி அதற்கு பின்னால், ஒழிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை திராவிடர்களுக்கு இருக்கிறது. இதனால், நீங்கள் வைத்திருக்கும் பெரியாரை தயவு செய்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அந்த சிலையை அப்படியே தூக்கிகொண்டு ஈரோடு தேர்தலுக்கு வாருங்கள் என்று விமர்சித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய சீமான், பெரியாருடைய கோட்பாடு எல்லாம் பேசி பேசி ஓட்டு கேளுங்க. அதுதானே, பெரியாரை போற்றுவது , மதிப்பது. பெரியார் படத்தை வீடு வீடாக கொடுத்து ஓட்டு கேளுங்கள். காந்தி படத்தை கொடுத்து கேட்கக்கூடாது என்று காட்டமாக பதிலளித்தார். பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் ஸ்ட்டர்ஜியை பயன்படுத்தி ஆட்சிக்கு வருகிறேன் என்று பிச்சை கேட்கிற இந்த கட்சியெல்லாம் என்னையே பேசலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதேபோல், பிரபாகரனின் அண்ணன் மகன் சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து கேள்வி எழுப்பிய பெண் நிருபரிடம், நேரலை என்று பாராமல் தகாத வார்த்தையில் பதில் கூறிவிட்டு சீமான் சென்ற பெரும் கண்டனத்தை எழுப்பி வருகிறது.

Readmore: சேலம் | ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!! விளம்பரத்தை பார்த்து அலைமோதிய கூட்டம்..!! ஸ்கெட்ச் போட்டு ரூ.100 கோடியை சுருட்டிய கும்பல்..!!