அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அன்று அரசு பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில், ஆரம்பக்கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. விஜயதசமி தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லை தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக “அ” என்று எழுதப்பழக்குவார்கள். அந்தவகையில், வரும் சனிக்கிழமை விஜயதசமி அன்று பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாள்கள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூழலில் அக்டோபர் 12ஆம் தேதி சனிக் கிழமை விஜயதசமி தினம் அன்று அரசு பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், அன்றைய தினம் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்பினால் அன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Readmore: சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ.10,792 டிக்கெட்டா..? ஜெட் வேகத்தில் எகிறிய விலை..!!