தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கோனேரிப்பட்டி, கல்வடங்கம், தேவூர் வழியாக காவிரி ஆறு செல்கிறது. தற்போது, தண்ணீர் வரத்து மிக குறைவாக உள்ளது. இதனை பயன்படுத்தி புள்ளாகவுண்டம்பட்டி ஏரித்தோட்டம் காவிரி ஆற்று பகுதியில், சட்டவிரோதமாக சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று அரசிராமணி குள்ளம்பட்டி நீர்வளத்துறை அலுவலக உதவி பொறியாளர் பவித்ரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, 2 டிராக்டர்களில், 2 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் ஏரித்தோட்டத்தை சேர்ந்த பெருமாள், 55, சின்னமணி, 36, என தெரிந்தது. இதுகுறித்து பவித்ரன் புகார்படி, தேவூர் போலீசார் நேற்று, பெருமாள், சின்னமணியை கைது செய்து, இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

Readmore: ”நம்புற மாதிரியே நாடகம் ஆடுறதுல நீங்க தான் கில்லாடியாச்சே”..!! எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு..!! ஆளுங்கட்சியானதும் எதிர்ப்பா..? திமுகவை வெச்சி செய்த விஜய்..!!