ஆந்திராவில் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமோசாவும், பிரியாணியும் மூன்று பேரின் உயிரை பறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினத்தில் உள்ள பழங்குடியினர் விடுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு சமோசாவும், பிரியாணியும் வெளியில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இதை சாப்பிட்ட மாணவர்கள் சில மணி நேரங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
என்ன நடந்தது என யோசிப்பதற்குள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 80-கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் மாணவர்கள் சாப்பிட்ட சமோசாவும், பிரியாணியும் கொட்டுப்போனது தெரியவந்தது. மேலும், உயிரிழந்த மாணவர்களை அடையாளம் காணப்பட்ட நிலையில், மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்ட உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்காமல், அவர்களை விடுதி பொறுப்பாளர் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. வசதி வாய்ந்தவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பல்வேறு விதமான காரங்களுக்காக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், தரமற்ற உணவுகளால் 3 பேரின் உயிரை காவு வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உஷார் மக்களே..! விஷமாக மாறிய சர்க்கரை, உப்பு..? தெரியாம கூட இதை செஞ்சிடாதீங்க..!!