பெஞ்சல் புயலால் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டதால் சேலம் – ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலால் ஏற்காடு மலை பாதையில் கடும் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஏற்காடு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. கடந்த 4 தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஏற்காடு கிராமவாசிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து மலைப்பாதை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாக பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றதால், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சேலம்- ஏற்காடு பிரதான சாலை உடனடியாக சீரமைக்கப்பட்டு நேற்று (04.12.2024) பிற்பகல் 3 மணி முதல் போக்குவரத்துக்கு இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Readmore: விபரீதமான விளையாட்டு!. தொண்டையில் சிக்கிய பலூன்!. மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் பலியான சோகம்!