சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் புதிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் தின்னப்பட்டி ஊராட்சி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி, நாய் உள்ளிட்டவைகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. மேலும் சிறுத்தையை பிடிக்க கூடுதலாக வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு கருங்கரடு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினரும் பார்த்ததாக கூறினர்.
இந்தநிலையில், சிறுத்தையை பிடிக்க கோரி, கிராம மக்கள் கொளத்தூர் வனத்துறை சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் ஐந்து கூண்டுகள் மற்றும் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறைக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பிரேத பரிசோதனையில் சிறுத்தையை கல்லால் தாக்கி பின்னர் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Readmore: சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு!. விரிவாக்கம் குறித்து அப்டேட்!