வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்கும் பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இளைஞர்களை வேலைக்கான திறன் மற்றும் சூழலுக்கு தயார் செய்யும் வகையில், நிறுவனங்களில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலமாக திறன்மிகு ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது. தொழிற்பயிற்சி என்பது முதன்முதலில் பணிக்கு சேருபவர்களுக்கு ஒரு அலுவலக பணி, தொழில்நுட்பம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, தனக்கான எதிர்கால பணி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள உதவுகிறது.

தொழிற்பயிற்சி காலத்தில் துறை சார்ந்த திறன்களை ஒருவர் மேம்படுத்திக் கொள்ள முடியும். இதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் பிரதமர் தொழிற்பயிற்சி திட்டம். 5 வருடங்களில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு 1.25 லட்சம் மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வண்ணம் பிரதமர் பயிற்சி திட்டம் 2024 தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் மூலம் வரும் டிசம்பரில் முன்னணி நிறுவனங்களில் சுமார் 1.25 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்கும் பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் கடந்த 2ம் தேதி தொடங்கி வைக்கப்பட இருந்த இந்த திட்டம் வேதாந்தா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து இண்டர்ன்ஷிப் கடிதம் அனுப்பப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டு, ரூ.6000 டெபாசிட் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: இவ்வளவு கம்மி வட்டியா?. கூட்டுறவு சங்கத்தில் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு!. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!