சேலம் நங்கவள்ளி அருகே ஏரியில் மூழ்கி பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று வழங்கினார்.

சேலம் நங்கவள்ளியில் உள்ள கெத்திக்குட்டை ஏரியில் கடந்த 20ம் தேதி துணி துவைப்பதற்காக சென்ற சிவலிங்கம் மகள் சிவநந்தினி(18), மகன் சிவஸ்ரீ(10) மற்றும் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி ஆகியோர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சத்திற்கான காசோலையை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் நேரில் வழங்கினர். சிவலிங்கம் குடும்பத்திற்கு ₹4 லட்சத்திற்கான காசோலையும், முனுசாமி குடும்பத்திற்கு ₹2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Readmore: ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்!. கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!.