மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆக.9ஆம் தேதி தொடங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவா்கள், தங்களின் இளநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, உள்ளிட்ட படிப்புகளை தொடருவதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ”தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வரையிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. கல்விக்கு சாதி உட்பட எதுவும் தடையாக இருக்கக் கூடாது. கல்வியை யாராலும் திருட முடியாது. ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும். கோவையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
Read More : பவானி காவிரி கரையோரத்தில் வீடுகளில் புகுந்த வெள்ளம்..!! பீரோ, கட்டில், டிவியுடன் வெளியேறிய மக்கள்..!!