வரும் மார்ச் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அவர் மீது அழுகிய முட்டைகளை வீச ரஜினி ரசிகர்கள் பிளான் போட்டுள்ளதாக வெளியான ஆடியோவால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக அனைத்து மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் அதாவது எக்ஸ் தள ஸ்பேஸில் கூடிப் பேசியிருக்கிறார்கள். அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது,மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை ரூ. 6 அல்லது ரூ. 6.50 என நினைக்கிறேன். மொத்தமாக கூட்டு முயற்சியா எல்லோரும் சேர்ந்து ஒரு அக்கவுண்ட் ஒன்னு ரெடி பண்ணி அதில் பணத்தை போட்டு மொத்த விலைக்கே எடுத்துடலாம். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ரொம்ப ஃபேமஸ். அழுகிப் போன முட்டை என்றால் ரூ. 1.50 தான் வரும். அழுகிய முட்டைகளை மொத்தமாக வாங்கி விஜய் வரும்போது அவர் மீது வீசலாம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் நிர்வாகிகள், இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.