மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நினைத்த நேரத்தில் பணம் கிடைக்கும் என்றால், அது நகைக்கடனில் மட்டும்தான் கிடைக்கும். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது என்பது இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறை. மருத்துவ தேவை, பொருளாதார நெருக்கடி, விவசாய தேவை, தொழில் தேவை என அவரவர் தேவைகளுக்காக நகைகளை வங்கியில் அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இதுவரை நகைக்கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தி, அதன் அவகாசம் முடிந்ததும், அதே நாளில் நகையை மீட்டு மறு அடமானம் வைக்கும் வசதி இருந்தது. இதனால், நகைக்கடன் வாங்குவோருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போதைய புதிய விதிமுறைப்படி, வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள், அதன் அவகாசம் முடிந்ததும் முழு தொகையையும் செலுத்தி நகையை மீட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர், நகையை மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அதே நாளில் மறு அடகு வைக்க முடியாது. மறுநாள் தான் வைக்க முடியுமாம். உதாரணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு நகைக்கடன் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான வட்டியை மட்டும் செலுத்தி, மறு அடகு வைத்திருப்போம். ஆனால், இனி அந்த ரூ.2 லட்சத்தையும் முழுமையாக செலுத்திய பின்பு தான் மறு அடகு வைக்க முடியும். கடன் வழங்குவதில் உள்ள வெளிப்படைத் தன்மை, பிரச்சனைகளை களைவதற்காகவே இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Read More : வழிப்பாதையை மறைத்து கம்பி வேலி..!! கூலிப்படையை அழைத்து வந்து பெண்கள் மீது கொடூர தாக்குதல்..!! எடப்பாடி அருகே பரபரப்பு சம்பவம்..!!