தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை விஜய் தொடங்கினார். கட்சியை அறிவித்ததுமே, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணிகளை தற்போது அவர் மேற்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக வெளியாகி உள்ளது. சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்வது குறித்து சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் தான், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் பணியாற்ற அவர் என்னை அழைத்தால் செல்வேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இப்போ இருக்கிற நெருக்கடிக்கு அரசியலுக்கு வந்தாலும் வரலாம். என்னுடைய உள்ளுணர்வு அதுதான் சொல்கிறது. விஜய் என்னை அழைத்தால் அவருடன் நான் செல்வேன். சீமானும் விஜய்யும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்” என்று அமீர் கூறியுள்ளார்.
Read More : Mettur Dam | 120 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! நீர்வரத்து 1.55 லட்சமாக அதிகரிப்பு..!!