காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை வினாடிக்கு 16,196 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 92 அடியிலிருந்து 93.35 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 56.56 டி.எம்.சி ஆக உள்ளது.

Readmore: எடப்பாடி அருகே ஆடுகளை கடித்து குதறிய மர்மவிலங்கு!. மக்கள் அச்சம்!