போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பை தடுக்கும் வகையிலும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் போதைப்பொருள் புழக்கத்தால் ஏற்படும் தீமைகளை பற்றி இளைய தலைமுறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் ஆங்காங்கே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றனர். அந்தவகையில், போதைப்பொருள் புழக்கம் குறித்து சேலத்தில் கல்லூரி விடுதிகள், தனியாா் தங்கும் விடுதிகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாா் பொறியியல், அறிவியல் கல்லூரிகளின் விடுதிகள், மாணவா்கள் தங்கியுள்ள தனியாா் விடுதிகளில் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை, போதை தரும் சில பொருள்களை கைப்பற்றினா். மேலும், மாணவா்களின் விவரங்கள், அவா்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
Readmore: பேங்க் அக்கவுண்ட் முதல் சிம் கார்டு வரை!. அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள் அமல்!.